டெல்லி: தமிழ்நாட்டில் என்எல்சி நிறுவனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி. சிவி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று 7வது நாளாக, மணிப்பூர் விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில்,  என்எல்சி நிர்வாகம், 25 ஆயிரம் ஏக்கர் முதன்மையான விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துகிறது, மேல் வளையமாதேவி பகுதியில் விளைநிலங்களை அளித்து என்.எல்.சி. நிறுவனம் கால்வாய் அமைக்கும் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. சிவி சண்முகம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அந்த நோட்டீஸில், என்எல்சி நிறுவனம் 25 ஆயிரம் ஏக்கர் முதன்மையான விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்பி சிவி சண்முகம் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. என்எல்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேல் வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.