சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள பழைய சர்வதேச புறப்பாடு முனையத்தை (T4) 2வது உள்நாட்டு புறப்பாடு முனையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி (2023) திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, .புதிய முனையம் கடந்த மே மாதம் 25-ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. முதல்கட்டமாக சோதனை ஓட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து சிறிய மற்றும் நடுத்தர ரக விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. 2023 ஜூன் மாதம் 13-ம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய முனையத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து, வங்கதேசம் தலைநகர் டாக்காவுக்குஇயக்கப்படும் யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு இயக்கப்படும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ்விமானம் ஆகியவையும் புதியமுனையத்தில் இருந்து இயக்கப்பட்டன.
இந்த மாதம் (ஜூலை 2023) முரதல், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்விமான நிறுவனங்களின் அனைத்துசர்வதேச விமானங்களும், புதியமுனையமான டெர்மினல் 2 எனப்படும் (டி 2) முனையத்தில் இருந்துஇயங்கத் தொடங்கியுள்ளன. இதனால் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 பகுதிகளுக்கு இயக்கப்படும் சுமார் 18 புறப்பாடு விமானங்கள், 18 வருகை விமானங்கள் என மொத்தம் 36 சர்வதேச விமான சேவைகள் புதிய முனையத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன. அதுபோல பெரியரக விமானங்கள் ஜூலை முதல் வாரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால், புதிய முனையம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இதையடுத்து, தற்போது செயல்பாட்டில் இருக்கும் டெர்மினல் 3 என்ற (டி 3) பழைய சர்வதேச முனையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. அதை உள்நாட்டு புறப்பாடு முனையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அங்கு, பேஸ் 2 கட்டுமானப் பணி விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு கோடையில் அதிக விமானங்கள் இயக்கும் வகையில், பணிகள் விரைவாக நடைபெறும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.