சென்னை: ஜூலை மாதத்தில் டிஎம்கே பைல்ஸ்2 ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்திருந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகயில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார்.
திமுக அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறி வரும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே டிஎம்கே பைல்ஸ்1 என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் உள்பட பல அமைச்சர்கள் மீது அதில் புகார் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அவதூறு வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஜூலை முதல் வாரத்தில் திமுக.வின் 21 பேர் அடங்கிய சொத்துப்பட்டியலின் 2ம் பாகம் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்த ஊழல் பட்டியலை மக்கள் மத்தியில் வெளியிடுவதாக அல்லது, ஆளுநரின் சமர்ப்பிப்பதா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார். அபிபோது, திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்டக் கோப்புகளை ஆளுநரிடம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.