சென்னை

மிழக ஆளுநர் ஆர் என் ரவியை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று மாலை 3 மணிக்குச் சந்திக்க உள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கிடையே நல்லுறவு சிறிதும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  மாநில அரசின் பல விஷயங்களில் ஆளுநர் ஏதேனும் குற்றம் குறை கண்டுபிடித்து விமர்சனம் செய்வது தொடர்ந்து வருகிறது.   ஆளுநர் பாஜகவின் கையாளாகச் செயல்படுவதாகப் பல கட்சித்தலைவர்கள் குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை 3 மணி அளவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்கிறார்.  இந்தச்சந்திப்பின் போது திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்கள் அடங்கிய கோப்புகளை ஆளுநரிடம் வழங்குகிறார். அவர் டாஸ்மாக் தொடர்பான வெள்ளை அறிக்கையையும் ஆளுநரிடம் வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக அரசு மற்றும் ஆளுநர் இடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில் அவரிடம் அமைச்சர்களின் சொத்து விவரங்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளிக்க உள்ளது அரசியல் களத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.