இஸ்லாமாபாத்
கணவருடன் ஏற்பட்ட தகராறு குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணியை பாகிஸ்தானில் காவலர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வசித்து வரும் இளம் கர்ப்பிணி ஒருவர், சில தினங்களுக்கு முன் அவரது கணவருடன் சண்டை போட்டுள்ளார். பிறகு அவர் உதவி கேட்டு அந்த பகுதியிலிருந்த நூன் காவல் நிலையம் நோக்கிச் சென்றுள்ள போது, வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒருகாவலரை சீருடையில் பார்த்திருக்கிறார்.
பெண் அவரிடம் சென்று காவல் நிலையம் செல்வதற்கான வழி கேட்டுள்ளார். அவர் காவல் நிலையத்தில் கொண்டு செல்கிறேன் எனக் கூறி அழைத்துச் சென்று அதற்குப் பதிலாக ஜாங்கி சையதன் என்ற இடத்தில் உள்ள பிளாட் ஒன்றிற்குக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் என்ற செய்தி நிறுவனம் இதைத் தெரிவித்து உள்ளது.
டால்பின் அவசரக்கால அதிரடிப் படை என்ற பிரிவுடனும் அந்த காவலர் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி அந்த பிரிவைப் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா கடந்த 21-ந்தேதி தொடங்கி வைத்துள்ளார் , இந்த பலாத்கார சம்பவம் வெளியே தெரிய வேண்டாம் என 2 நாட்களாக வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்து உள்ளது.
அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் கால நீட்டிப்பை செய்து வந்தனர். ஆயினும், விசாரணையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணை காவலர் பாலியல் பலாத்காரம் செய்திருந்தது நிரூபிக்கப்பட்டது.அந்த காவலர் இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]