சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காவிரி பிரச்சினை, அமலாக்கத்துறை பிரச்சினை, மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறிப்பாக தமிழக்த்தின் அனைத்து பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனை என்ற பெயரில் தொல்லைப்படுத்தி வரும் அமலாக்கத்துறை விசாரணை மற்றும் காவிரி பிரச்சினையில், கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்பட பல்வெறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.