சென்னை
இன்று தமிழக அமைச்சர் பொன்முடி அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா பலகலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
நேற்று தேசிய கல்விக்கொள்கை குறித்து தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
[youtube-feed feed=1]