டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் வழங்கியுள்ளன.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “…குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விட மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி யளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையாக உள்ள பழங்குடி மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி எனப்படும் மற்றொரு பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி தொடர்ந்து வருகிறது. இந்த கலவரம் கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரு வீடியோ வெளியானது. அதில், மணிப்பூரில் 2 குகி பழங்குடி பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கும்பலாக பலாத்காரம் செய்த வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கலவரம் மற்றும் வீடியோ குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் ஒத்திவைப்பு தீர்மான அனுப்பியுள்ளனர்.
மணிப்பூரில் கொடூரம் இரு அவைகளிலும் காங்கிரஸ், திமுக, சிபிஐ, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மணிஷ் திவாரி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கூறுகையில், “…இன்று, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. மணிப்பூர் நிலவரம் குறித்து இரு அவைகளிலும் உணர்வுப்பூர்வமான மற்றும் பொறுப்பான விவாதம் நடத்தப்பட வேண்டும். மணிப்பூர் எல்லை மாநிலம், அங்கு சூழ்நிலை சரியில்லை என்றால். மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஒரு அடியை அனுபவிக்கிறது, அது தொலைநோக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “…அரசியலமைப்பு சட்டத்தை மீறியதற்காக தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நான் ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளேன். இன்று முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்” என்றார்.
மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் குறித்து விவாதம் நடத்தப்படும், யாராவது (அரசாங்கத்திலிருந்து) பதில் அளிப்பார்கள் என்றார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் முன், பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “இன்று, இந்த ஜனநாயகக் கோவிலில், சவான் மாசத்தில் நாம் கூடும் போது, அனைத்து எம்.பி.க்களும், மக்கள் நலனுக்காக இதைப் பயன்படுத்தி, எம்.பி.க்களாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்…”
மணிப்பூர் விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது” என்றார்.
“என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிரம்பியுள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடானது. அனைத்து முதல்வர் களும் தங்கள் மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் – குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அது ராஜஸ்தான், சத்திஷ்கர் அல்லது மணிப்பூரின் எந்த மூலையிலும் அல்லது நாட்டின் எந்த மூலையில் நடந்தாலும் அது வெட்கக்கேடு, இதற்குப் பின்னால் இருப்பவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் என்றார்.
எதிர்க்கட்சி எம்பிக்களின் நோட்டீஸை ஏற்று, அவையில் விவாதிக்க அவைத் தலைவர்கள் நிராகரிக்கும் பட்சத்தில், கூட்டத்தின் முதல் நாளே அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.