சான் ஃப்ரான்சிஸ்கோ
டிவிட்டர் நிறுவனம் கடன் சுமையில் உள்ளதாக எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்நிறுவனத்தில் சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு பிறகு அதில் சிலர் மீண்டும் சேர்க்கப்பட்டனர். முக்கியமாக இந்த செயலியில் பதிவிடுவதில் மாற்றங்கள் கொண்டு வந்ததால் விளம்பரங்கள் குறைந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் டிவிட்டரை விட்டு வெளியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள் எனவும் டிவிட்டர் லாபம் ஈட்டும் எனவும் கூறி இருந்தார். ஆனால் பயனாளர்கள் ஒரு நாளில் இத்தனை பதிவுகள் மட்டுமே படிக்க முடியும் என்னும் கட்டுப்பாட்டால் பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்து விளம்பரங்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
“டிவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம். அதேபோல டிவிட்டருக்கு அதிக அளவிலான கடன்சுமை இருக்கிறது. வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக டிவிட்டரை லாபப்பாதைக்கு கொண்டு வரவேண்டும்”
எனக்கூறியுள்ளார்.
தற்போது மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள திரெட்ஸ் என்னும் புதிய செயலிக்கு பயனாளர்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.