சென்னை:
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்கு பெயர் பெற்ற இந்தியாவில், பொது சிவில் சட்டம் ஒரு அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்றும், அதனால் பொது சிவில் சட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டங்களில் ஒரே மாதிரியான தன்மையை கொண்டு வர முயல்வதை விட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரே மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.