சென்னை: சமூக நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 மகளிர் விடுதிகளை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.1559.25 கோடி மதிப்பீட்டில் 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தொழில் நுட்ப மையங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 7 மகளிர் விடுதிகளை திறந்து வைத்ததார். சென்னை கூடுவாஞ்சேரி, திருச்சியில் ரூ.13.7 கோடி மதிப்பில் 2 புதிய விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், ரூ.13.07 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடங்கள் மற்றும் ரூ.3.42 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 7 மகளிர் விடுதிக் கட்டடங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.1559 கோடி மதிப்பில் 4o தொழில்நுட்ப மையங்கள் தொழில்நுட்ப மையங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.