ஜி 20 கூட்டம் மற்றும் அமைச்சகத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசியாபாத்தைச் சேர்ந்த அந்த நபர் மீது உளவு பார்த்ததாகவும் இந்திய அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தில் பணிபுரியும் நவீன் பால் என்ற அந்த நபர் சமூக வலைத்தளம் மூலம் ஒரு பெண்ணுடன் வாட்ஸாப்பில் தொடர்பு வைத்திருந்ததாகவும் அந்த பெண் மூலம் இந்திய அரசின் ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகள், உத்தர பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து ஒரு பெண் நவீன் பாலுடன் வாட்ஸப்-பில் பழகி வந்ததாகவும் ஆனால் அந்த மொபைல் எண் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ஐ.பி. போன் மூலம் இயங்கிவந்ததும் தெரியவந்துள்ளது.
நவீனின் மொபைல் போனில் இருந்து வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜி20 தொடர்பான பல ஆவணங்கள் அந்த பெண்ணுக்கு அனுப்பியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர், அவை ரகசிய கோப்புகள் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும், ராஜஸ்தானின் ஆல்வாரைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் தேடி வருவதாகவும், அவர் நவீனின் கணக்கிற்கு டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.