சென்னை:
மிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்றும், சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும், கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும் என்றும், தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்,  பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.