வேலூர்:
உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்,
பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்தனர், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே, அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது என்று அவர் கூறினார்
தங்கள் தவறை உணர்ந்து, உணவகம் சார்பில் கடிதம் அளித்ததால், அன்று மாலையே உணவகம் திறக்கப்பட்டது என்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.