புவனேஷ்வர்: 292 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்துக்கு மனித தவறு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம், என விபத்து குறித்து விசாரணை நடத்திய விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிவலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. கடந்த மாதம் (ஜூன் 2ந்தேதி) நடைபெற்ற இந்த விபத்தில் இந்த இரண்டு பயணிகள் ரயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டு பலத்த சேதமடைந்தன. இதில் 292 பேர் பலியான நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அங்குள்ள மூன்று தனித்தனி தடங்களில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடன்று மோதி விபத்துக்குள்ளானது. பஹாநகா் பஜாா் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ரயில் நுழைந்து, சரக்கு ரயிலின் மீது மோதிய்து. இதில் கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. அவை, சரக்கு ரயில் மீதும், அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்திலும் சிதறி விழுந்தன. அப்போது, அந்த தண்டவாளத்தில் எதிா்த்திசையில் வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், அந்தப் பெட்டிகள் மோதி தடம்புரண்டு கோர விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்துக்கு காரணம் குறித்து ஆராய 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டிருந்தது. மேலும், ரயில்வே பாதுகாப்பு ஆணையம், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்தது.
இந்திய ரயில்வேயின் மூத்த செக்ஷன் பொறியாளரான ஏ.கே.மஹந்தா, மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் நேரடியாக முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்ட ஐந்து பேர் அடங்கிய குழுவில் ஒருவர். இந்தக் குழு சமர்ப்பித்த 2 பக்க ஆய்வு அறிக்கையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்து.
முதலில், மற்ற நான்கு உறுப்பினர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, 12841 கோரமண்டல் விரைவு வண்டி, மெயின் லைன் வழியாக செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டு, லூப் லைனுக்குள் அந்த ரயில் நுழைந்து அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என்ற கருத்தினை ஏற்று அந்த அறிக்கையில் கையெழுத்திட்டார். இருந்தபோதிலும் பின்னர் ஆய்வறிக்கையின் கருத்துகளில் இருந்து முரண்பட்டு, தனது மாறுபட்ட இரண்டு கருத்துகளை அவர் முன்வைத்துள்ளார்.
பாயிண்ட் (17A) லூப் லைனுக்காக அமைக்கப்பட்டது என்ற கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அவர், டேட்டா லாக்கர் அறிக்கைகளை ஆராய்ந்ததின் அடிப்படையில், அந்த பாயிண்ட் மெயின் லைனுக்காக அமைக்கப்பட்டது. அது ரயில் தடம்புரண்ட பின்னரும் அங்க இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்sது.
ஆய்வில், விபத்துக்கான சாத்தியமான காரணமாக, அலட்சியம் அல்லது உள்நோக்கம் மூலம் சமிக்ஞை குறுக்கீடு உள்ளதாக தெரிவித்து உள்ளது. அதாவது, தவறான சிக்னல் கொடுத்ததன் விளைவாகவே இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது, இதற்கு முழுக்க முழுக்க மனித தவறே காரணம் என்றும் விவரித்துள்ளது.
விசாரணை குழுவினரின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த விபத்து குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பரவி வரும் நிலையில் விசாரணை அறிக்கையும் மனித தவறே காரணம் என சுட்டிக்காட்டி உள்ளது.