பாக்பத்:
தக்காளி விலை உயர்வு அடைந்துள்ள நிலையில் செல்போன் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் பாக்பத் மாவட்டத்தில் ஒரு கடை ஒன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாக்பத் கிராமத்தில் உபேந்திர குமார் மொபைல் விற்கும் கடை வைத்துள்ளார். பணவீக்கம் காரணமாக, வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், உபேந்திரா ஒரு மொபைல் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.