திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
சனிப்பிரதோசமான நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த சூப்பர் ஸ்டார் 22 ஆண்டுகள் கழித்து இங்கு மீண்டும் வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த கோயிலின் கிரிவலபாதைக்கு மின்விளக்குகள் அமைத்து தந்த ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்ததை அறிந்து அவரைக்காண ஏராளமானோர் திரண்டனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த ஒருவாரமாக திருவண்ணாமலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவரும் ரஜினிகாந்த் நேற்று திடீரென கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.