போபால்
இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரயில் சேவைகளில் ஒன்றாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டது. பல மாநிலங்களில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று முதல் மத்தியப் பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இந்த சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இன்று மத்தியப் பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
Patrikai.com official YouTube Channel