பாரிஸ்

ரும் ஆண்டு ஏப்ரல்  16 ஆம் தேதி கிரீசில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2024 ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் ஜோதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் டோனி எஸ்டான்குவெட் இது குறித்து,

“வரும் 2024-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 16-ம் தேதி, பழமையான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் ஜோதி, சூரிய கதிர்களைக் கொண்டு ஏற்றப்படும். பிறகு அந்த ஜோதி கிரீஸ் நாடு முழுவதும் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு ஏதென்ஸ் நகரில் வழங்கப்படும்.

ஏதென்சில் இருந்து ஏப்ரல் 27-ம் தேதி புறப்படும் ஒலிம்பிக் ஜோதி, பெலேம் என்ற கப்பலில் ஏற்றப்பட்டு பிரான்ஸின் மார்செய்ல் துறைமுகத்துக்கு வந்து சேரும். அங்கிருந்து பழமையான நகரங்களுக்கு ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்பட்டு நார்மன்டி நகரிலுள்ள மான்ட் செயின்ட்-மைக்கேல், செயின்ட் எமிலியான், சாப்ளிஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒலிம்பிக் ஜோதி பயணமாகும்.”

எனக் கூறி உள்ளார்.

பிரான்ஸில் உள்ள புராதன இடங்கள் உட்பட 400 நகரங்களுக்கு மொத்தம் 68 நாட்கள் ஒலிம்பிக் ஜோதி பயணமாகிறது. பிரபல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும்  இந்த ஜோதியைச் சுமந்து செல்லவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர் என்று பாரீஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் ஜோதி, இறுதியாகப் போட்டி நடைபெறும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டு பெரிய கொப்பரையில் ஏற்றப்படும்.