தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகநீதிப் பேரவையைச் சேர்ந்தவர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது பேரவையைச் சேர்ந்தவர்கள் முதல்வர் சித்தராமையாவிடம் செங்கோல் ஒன்றை பரிசாக வழங்கினார்கள்.
ஆனால் செங்கோல் என்பது ஜனநாயக மரபுக்கு எதிராக மன்னர் மரபை பிரதிபலிக்கும் சின்னமாக இருப்பதால் அதை ஏற்க மறுத்தார்.
அதேவேளையில் அவர்கள் அளித்த புத்தகங்கள் மற்றும் மலர்கொத்துக்கை ஏற்றுக்கொண்டார்.
மன்னராட்சியின் சின்னமாக விளங்கும் செங்கோலை தொழுது வணங்கி ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி அதை புதிய நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே சமீபத்தில் நிறுவிய நிலையில் சித்தராமையாவின் இந்த செயல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.