சென்னை

ளுநர் ஒப்புதல் இன்றி அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டது.  இதையொட்டி ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதில் இருதய இரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அல்லி அமைச்சரை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.   செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்காக நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாக்காக்கள் மாற்றப்பட்டு அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக அறிவிக்கும்படி ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.   ஆளுநர் ஆர் என் ரவி இதை மறுத்துள்ளார்.   இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டிவிட்டரில் வெளியான தகவலில்

“அமைச்சர்கள் மாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் இதற்கு முன் ஆளுநர் சென்னாரெட்டி காலத்தில் இலாகா மாற்றம் தொடர்பாக G.O. Ms. No. 1068 & 1069 dated 16-11-1994 போல தமிழ்நாடு அரசே மாற்றம் செய்து அரசாணை வெளியிட முடியும் நீதிமன்றம் சென்றாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படும்

If in doubt, Please click the below link to verify

https://indiankanoon.org/doc/82846/”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.