இம்பால்
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

கடந்த மாதம் மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதுவரை இந்த வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
[youtube-feed feed=1]