சான்ஃப்ரான்சிஸ்கோ

டிவிட்டர் நிறுவன முன்னாள் சி இ ஓ ஜாக் டார்சே மோடி அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர் டிவிட்டர் சமூக வலை தளத்தில் உறுப்பினராக உள்ளனர்.  பல அரசு தகவல்கள் டிவிட்டர் மூலமே வெளியிடப்படுகிறது.   எனவே டிவிட்டரில்  வரும் செய்திகளுக்குத் தனி நம்பத்தன்மை உள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் டிவிட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சி இ ஒ) ஜாக் டார்சே  மோடி அரசு டிவிட்டருக்கு அழுத்தம் கொடுத்து மிரட்டியதாக குற்றம் சாட்டி உள்ளார், 

அவர் தனது பதிவில்,

“இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்த போது அது குறித்துப் பதிவிட்ட மற்றும் மத்திய அரசை விமர்சித்த டிவிட்டர் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும் என மோடியின் மத்திய அரசு அழுத்தம் அளித்தது.

அவ்வாறு நடக்கத் தவறினால் இந்தியாவில் உள்ள டிவிட்டர் அலுவலகங்களை மூடுவோம், எனவும் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்துவோம் எனவும் மோடி அரசு எங்களுக்கு எச்சரிக்கை விடுத்து  மிரட்டியது”

என்று தெரிவித்துள்ளார்

டிவிட்டர் நிறுவன முன்னாள் சி இ ஓ அளித்த இந்த பகீர் குற்றச்சாட்டு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.