சென்னை:
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.

பட்டமளிப்பை தாமதப்படுத்தி வருவதை கண்டித்து வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளதாக தி.மு.க. மாணவர் அணி உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் சென்னை, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில், 16ஆம் தேதி காலை 9 மணிக்கு நடை பெறும் என்றும், இதில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் வழங்கவும் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel