மும்பை:
மகாபாரத தொடரில் சகுனி மாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குஃபி பெயின்டல் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78.

சில காலமாக இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுடன் போராடி வந்த குஃபி பெயின்டல் 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை 9:00 மணியளவில் நடிகர் குஃபி பெயின்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குஃபி பெயின்டலின் மறைவு பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஃபி பெயின்டலின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]