சித்ரதுர்கா

முகநூலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது விமர்சனம் செய்ததால் அரசு ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.  அம்மாநில முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றுள்ளார்.  இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹொசதுர்காவை சேர்ந்த சந்தான மூர்த்தி என்னும். அரசு  தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்,  தனது முகநூலில் பதிவு இட்டுள்ளார்.

அவர் தனது  பதிவில்,

“கர்நாடகாவில் இருந்த முதல்வர்களிலேயே அதிகமாகக் கடன் வாங்கியது சித்தராமையா தான். ஆனாலும் இலவசத் திட்டங்களை அவர் அறிவித்துக்கொண்டே இருக்கிறார். அவரது தவறான நிதிக் கொள்கையால் அரசின் கடன் அதிகரிக்கிறது ”

என விமர்சித்திருந்தார்.

இவரது பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளை மீறி முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக ஆசிரியர் சந்தான மூர்த்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.