பெங்களூரு

ர்நாடகா முதல்வ்ர் பதவி பகிர்வு குறித்து யாரும் எதையும் பேசட்டும் என டி கே சிவகுமார் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.  அங்கு முதல்வர் பதவி குறித்து எழுந்த சர்ச்சையில் முடிவு காண முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி கே  சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர்

இந்நிலையில்  முதல் 30 மாதம் சித்தராமையாவும் அடுத்த 30 மாதம் டி.கே.சிவகுமார் முதல்வராக இருப்பார்கள் என தகவல் வெளியானது. இந்தப் பதவிப் பகிர்வு என்ற திட்டப்படியே முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவகுமாரும் பதவி ஏற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் சித்தராமையாவே 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார் என அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சரின் பேச்சு பற்றிக் கேட்டதற்கு டி.கே.சிவகுமார் “யாரும் எதுவும் பேசட்டும்.  நான் ஏதும் கருத்துச் சொல்ல மாட்டேன்” எனப் பதில் அளித்துள்ளார். மேலும் பதவி உள்ளிட்ட கட்சிப் பிரச்சனைகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கவனித்துக் கொள்ளும் எனவும் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.