பெங்களூரு
கர்நாடகா மாநிலச் சட்டசபை சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிராச் கட்சி சார்பில் யு டி காதர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 10 ஆம் தேதி அன்று கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. அதில் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை சட்டமன்ற உறுப்பினர்-ஆக பதவி வகித்த யு.டி.காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஆளும் கட்சி நிறுத்தும் வேட்பாளரே வழக்கமாகச் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார் என்பதால் யு.டி.காதர், சபாநாயகராவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது., இதனால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாகக் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.
சபாநாயகர் பதவிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆர்.வி.தேஷ்பாண்டே, ஹெச்.கே. பாடில் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அவர்கள் சபாநாயகராக ஆர்வம் கட்டவில்லை என்பதால், காதரின் பெயரைக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பரிந்துரைத்துள்ளார். இதையொட்டி அவர் பெயர் ஏற்கப்பட்டதாகக் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.