டில்லி

பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் சட்டங்கள் அமைய வேண்டும் எனமக்களவைத் தலவர் ஓம் பிர்லா வலியுறுத்தி உள்ளார்.

நேற்று டில்லியில் சட்ட வரைவுப் பணி தொடர்பாக, மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம், நடைபெற்றது. இந்த நிகழ்வில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில். ”சட்ட வரைவுகளின்போது எளிய மொழிநடையை உறுதி செய்வது அவசியம். அத்துடன், சட்டங்களில் உரிய தெளிவு இருப்பது மிகவும் முக்கியமானது. இது, சட்ட விளக்கம் மற்றும் அமலாக்க நடைமுறைகளில் நேரத்தையும் வளத்தையும் மிச்சப்படுத்தும்.

நமது அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் சமகால நிகழ்வுகளை, சட்ட வரைவாளாக நன்கறிந்து வை திருக்க வேண்டும். சட்ட உருவாக்கத்துக்கு இணையாக, விதிகள் உருவாக்கமும் முக்கியமானது.

இந்த அம்சங்களில், மக்களவைச் செயலகம் சார்பில் தொடர்ந்து பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்” என்ற ஓம் பிா்லா. நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதங்கள் அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார்.