மகேந்திரகிரி
நேற்று மகேந்திரகிரியில் நடந்த 2 ஜி விகாஷ் எஞ்சின் வெப்ப பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது.
நேற்று மாலை 4 மணிக்குத் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரி மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் ககன்யான் 2ஜி விகாஷ் இன்ஜின் 2ம் கட்ட வெப்ப பரிசோதனை 603 விநாடிகள் தொடர் பரிசோதனையில் வெற்றி அடைந்தது.
இந்த பரிசோதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் முன்னிலையில் இஸ்ரோ வளாக இயக்குநர் ஆசீர் பாக்கிய ராஜ் மற்றும் இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர்கள் முன்னிலையில் 603 விநாடிகள் நடைபெற்றது. இது திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றிக்குப் பின் வரும் 2024ம் ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் 2 வாரக் கால விண்வெளி ஆய்வுக்குப் பிறகு பூமிக்குப் பத்திரமாகத் திரும்புவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இஸ்ரோவின் இந்த விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் III மூலம் 2024ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது.