மும்பை

பிஎல் போட்டிகளில் ஒரே தொடரில் 3 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.  இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி 199 ரன்களை குவித்தது.

அடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என மரண அடி அடித்து 83 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.  இதனால் மும்பை அணி 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மும்பை தனது வெற்றியைப் பதிவு செய்தது

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் 3 முறை 200க்கும் அதிகமான ரன்களை பெற்ற ஒரே அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது   இதற்கு முன்பு கடந்த 2014 இல் பஞ்சாப் கிங்ஸ் 2 முறையும், பிறகு 2018 தொடரில் சென்னை அணி இரண்டு முறை 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் எடுது வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.