கர்நாடக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிராக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கர்நாடக காண்ட்ராக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று நிறைவடைந்த நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா இருவரும் இன்று மைசூரு சாமுண்டீஸ்வரி ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர்.
ಶ್ರೀ ಸಿದ್ದರಾಮಯ್ಯ ಅವರೊಂದಿಗೆ ಇಂದು ಮೈಸೂರಿನ ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇಗುಲಕ್ಕೆ ಭೇಟಿ ನೀಡಿ ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ಅಧಿಕಾರಕ್ಕೆ ಬರಲೆಂದು ವಿಶೇಷ ಪೂಜೆ ನೆರವೇರಿಸಲಾಯಿತು. pic.twitter.com/JGeX0xj2Zf
— DK Shivakumar (@DKShivakumar) May 9, 2023
இந்த நிலையில், கடந்த ஆட்சியில் 40 சதவீத கமிஷனால் கான்டராக்டர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் அரங்கேறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்றும் ஊழல் காரணமாக பாதுகாப்பும் தரமுமற்ற உள்கட்டமைப்புகளே மக்களுக்கு கிடைத்ததாகவும் கர்நாடக கான்ட்ராக்டர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
The Karnataka State Contractors Association has written another letter – this time to the voters.
PM Modi never replied to their pleas against the BJP's 40% Commission government. Tomorrow the people of Karnataka will reply for him. pic.twitter.com/ilgGiOoYlO
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 9, 2023
இதுகுறித்து இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “ஊழலற்ற ஆட்சி அமைய அனைவரும் மனசாட்சிப் படி வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது.