போபால்:
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாலத்தில் இருந்து பஸ் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்கோன் மாவட்டத்தில், பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்துக் கொண்டு, கீழே விழுந்தது. அதில் 15 பேர் பலியான நிலையில், 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு கூறியுள்ளது.