கொல்கத்தா

ருமானத்தை மீறி சொத்துக் குவித்த புகாரை முன்னிட்டு மேற்கு வங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண கல்யாணி வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

 

பாஜகவினர் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட தலைவர்கள் மீது தொடர்ந்து வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.   குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இந்த குற்றச்சாட்டு அதிக அளவில் எழுப்பப்படுகிறது.   மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.

மேற்கு வங்க மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் கிருஷ்ண கல்யாணி என்பவரும் ஒருவர் ஆவார்.  இவர் மீது வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.  இதை அடுத்து நேற்று வருமான வரித்துறையினர் அவரது வீடு உள்ளிட்ட அவருக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் நடந்தது.  அந்த தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை கிருஷ்ண கல்யாணி திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார்.  தேர்தல் நேரத்தில் பாஜகவில் இணைந்த இவருக்கு பாஜக வாய்ப்பு அளித்து இவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.