மொகாலி:
ஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன் எடுத்து, 56 ரன் வித்தியாசத்தில் தோற்றது. லக்னோ 5வது வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் 2 வது இடத்துக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா – குஜராத் அணிகளும், இரவு 7.30 மணிக்கு டெல்லி – ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.