மந்திராலயத்தில் இருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நவபிருந்தாவனத்தில் இந்த அனுமன் அருள் பாலிக்கிறார்.
மூன்று அவதாரங்கள் ஒன்று சேர்ந்த அனுமான் இவர். திரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவை செய்வதற்காக அனுமனாகவும் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ண சேவை செய்வதற்காக பீமனாகவும் இக்கலியுகத்தில் ஸ்ரீ வியாச சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் செய்தார் இந்த மூன்று அவதாரங்களும் ஒன்றாக இணைந்தவர்தான் அவதாரத்ரய அனுமான். அனுமன் முகமும் பீமனை குறிக்கும் புஜங்களும் மத்வரை குறிக்கும் பகவத்கீதை சுவடியும் கொண்டு சேவை சாதிக்கின்றார். இவருக்குப் பின்னே சங்கு சக்ரங்களுடன் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இந்த அவதாரத்ரய அனுமனை வியாஸராஜர் பிரதிஷ்டை செய்தார்.
ராமசேவை செய்வதற்காக ஆஞ்சநேயராகவும், கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்காக பீமனாகவும், வியாசருக்கு சேவை செய்ய மத்வராகவும் அவதாரம் எடுத்தார் வாயு பகவான். மூவரையும் நினைவூட்டும் வகையில் கர்நாடகா, கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் உள்ள நவபிருந்தாவனத்தில் ‘அவதாரத்ரய அனுமான்’ கோயில் உள்ளது. இவரை வழிபட்டால் மனோபலம், புத்தி பலம், உடல்பலம் உண்டாகும்.
இவரது உருண்டு திரண்ட தோள்கள், கதாயுதம் பீமனைக் குறிக்கும். கையிலுள்ள சுவடிகள் மகான் மத்வாச்சாரியாரைக் குறிக்கின்றன. அகோபிலத்தில் ராமதரிசனம் பெற தவம் புரிந்த அனுமனுக்காக வில், அம்பு ஏந்திய நிலையில் ராமரின் அம்சமாக காட்சியளித்தார் நரசிம்மர். இவரே அனுமனுக்கு பின்புறத்தில் வீற்றிருக்கிறார்.