சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ பிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடமாட்டார் என்று அந்த அணியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர் ஐந்து போட்டிகளில் பேட்டிங் செய்து 60 ரன்கள் எடுத்ததுதான் மொத்தம் இதுவரை 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் இருந்து காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஐ.பி.எல் தொடரின் போது பெங்களூரு அணிக்காக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற அந்த தொடரின் இரண்டாவது பாதியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
2022 ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீசமுடியாமல் தொடரின் சில போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.