ஜெய்ப்பூர்:
சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று பெட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 170 ரன் எடுத்து, 32 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப் – லக்னோ அணிகள் மோத உள்ளன.