தொழிற்சங்கள் விடாப்பிடியை அடுத்து 12 மணி நேர வேலைச் சட்டத்தை நிறுத்திவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
8 மணிநேர வேலை சட்டம் அமலில் இருக்கும்போதே ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை வாரத்திற்கு 6 நாட்கள் பணிச்சுமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு வழக்குகள் நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
“தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்திவைப்பு” – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிவிப்பு
1/2 pic.twitter.com/Xn5BmUKtE5— TN DIPR (@TNDIPRNEWS) April 24, 2023
இந்த நிலையில் வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை தொழிலாளர்கள் விருப்பத்திற்கேற்ப நாளொன்றுக்கு அதிகபட்சமாக 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதி தவிர அதிகப்பட்சமாக வாரத்திற்கு 3 நாள் ஓய்வு குறைந்தபட்சம் 4 நாள் வேலை ஆகிய அம்சங்களுடன் கூடிய புதிய சட்டத்திருத்தம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய சட்டதிருத்தத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவிர ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது இதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், இந்த தொழிலாளர் சட்டத்திருத்தத்தை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்புவது உள்ளிட்ட மேல்நடவடிக்கையை நிறுத்திவைப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.