சென்னை:
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் எச்சரிக்கையில், சென்னை-சென்னை உள்பட தமிழகத்தின் 15 நகரங்களில் நேற்று, வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது, அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால், குழந்தைகள், முதியவர்கள் நேரடி வெயிலில் வெயிலில் செல்ல வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திப்பு காரணமாக, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில், ஏப்., 25 வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.