அகமதாபாத்:
அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி என்ற ஒரு சமூகத்தினரை திருடன் என விமர்சித்த ராகுல்மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை பாராளுமன்ற செயலகம் தகுதி நீக்கம் செய்துள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த வருகின்றனர்.
இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதையடுத்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி இழந்ததாக மக்களவைச் செயலகம் அறிவித்தது.
இந்நிலையில், அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.