ஐபிஎல் டி-20 தொடரில் இன்றிரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த போட்டியில் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
சிஎஸ்கே அணிக்காக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி விளையாட இருப்பதை அடுத்து இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.