சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் இன்று திடீர் மழை பெய்தது, சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக குற்றாலம் போன்ற ஒரு குளிர்ச்சியான சூல் காணப்படுகிறது.
மிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மாா்ச் 20) வரை 4 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மாநகர் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சைதாப் பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர், தி.நகர், தாம்பரம், சென்னை விமான நிலையம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததால்,. சாலைகளில் தங்கிய தண்ணீரில் வாகனங்கள் மிதந்து சென்றன. பிராட்வே, பூந்தமல்லி, தாம்பரம், கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, மாதவரம் உள்பட பால பகுதியில் விட்டு விட்டு பெய்து வருகிறது. அவ்வப்போது லேசான வெயிலும் தலை காட்டி வருகிறது.
இந்த நிலையில்,சென்னை வானிலை மையம், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.