புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 21 மாதங்களில் சுமார் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டையில் கடந்த 2017ம் அண்டு அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. அத்துடன் பய ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையும் இணைக்கப்பட்டது. இங்குள்ள ராணியார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான அனைத்து பரிசோதனை வசதி களும் உள்ளன. அதனால் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டாரங்களிலும் இருந்து பிரசவத்துக்காக ஏராளமானோர் ராணியார் மருத்துவமனைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில், அங்கு மகப்பேறுக்கு வருபவர்களின் பலரது குழந்தைகள் தொடர்ந்து இறந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மருத்துவர்களின் முறையான கவனமின்மையால் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் டீன், ”தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்ததற்கு பதில் அளிக்கப்பட்டதில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறந்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல், சிகிச்சை சரியில்லாமல் இறக்கவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் என்று கூறியதுடன், எடைக்குறைவு, மூச்சுத்திணறல், பிறவி குறைபாடு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் தான் இறந்துள்ளன. என்று கூறினார்.
மேலும், புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரசவ சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்றும் கூறினார்.