நெல்லை: பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன். அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு என டிவிட் பதிவிட்டுடள்ளார்.
மறைந்த முன்னாள் கல்வி அமைச்சரான பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உருவ படத்துக்கு திமுகவினர் மரியாதை செய்து வருகின்றனர். மேலும், பேராசிரியர் அன்பழகன் கல்வித்துறை அமைச்சராகக இருந்தபோது, அவர் ஆற்றிய பணிகளை மெச்சும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அங்கு அன்பகன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, அவரது பெயரில் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அவருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், இன்று பேராசிரியர் அன்பழகனின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், வாழ்நாளெல்லாம் கொள்கை உறுதியோடு, தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் காட்டிய பாதையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கு உறுதுணையாக இனமானம் காக்க அயராது பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் நினைவுநாளில் அவரைப் போற்றுகிறேன். அவரது வாழ்வு ஒவ்வொருவரும் பயில வேண்டிய கொள்கை வகுப்பு என தெரிவித்துள்ளார்.