
ராம்.கே.சந்திரன் இயக்கும் பகடி ஆட்டம் படத்தில் சைபர் க்ரைம் போலீசாக வருகிறாராம் ரகுமான். இதையடுத்து பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் மூல் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிப்பவராக வருகிறாரோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
இது பற்றி இயக்குநர் சந்திரனிடம் கேட்டால், “ இந்த படத்தின் நாயகி கவுரிநந்தா. ஆட்டோ டிரைவராக வரும் இவர்தான் படத்தின் நாயகி. ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உயரிய கொள்கையுடைய வீர மங்கையாக வருகிறார்” என்று நாயகியைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.
மறுபடி நாம் அதே கேள்வியை கேட்டால், “அதை இப்போதைக்கு சொல்ல முடியாது சார் என்கிறார். பிறகு,”நவீன உலகின் பொருளாதாரம் மற்றும் டெக்னாலஜி எப்படி ஒருவனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது என்பது கதையின் கரு” என்கிறார்.
ஒரு மாதிரி தலையை ஆட்டிவிட்டு வந்தோம்.
Patrikai.com official YouTube Channel