சென்னை:
பிரதமர் நரேந்திர மோடியை இன்று அமைச்சர் உதயநிதி சந்திக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று புறப்பட்டுச் சென்றார்.

கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக பொறுப்பு ஏற்றது முதல் விளையாட்டுத் துறை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், 2 நாள் பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புறப்பட்டு சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கும் அவர், இந்த சந்திப்பின்போது நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி நேரடியாக கோரிக்கை வைக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.