டெல்லி: 60 தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து, மேகலாயா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 11மணி வரை மேகாலயாவில் காலை 11 மணி வரை 44,73% வாக்குப்பதிவு; நாகாலாந்தில் 57,06% வாக்குகளும் பதிவாகி உள்ளன.


வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்  வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.  இரு மாநிலங்களிலும், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

காலை முதலே வாக்காளர்கள் தங்களது வாக்கினை  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

மேகாலயாவில் இன்று காலை  9 மணி நிலவரப்படி 12.06 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 15.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர்   11 மணி வரை மேகாலயாவில் 26.70% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நாகாலாந்தில் 35.76% வாக்குகளும் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில், மதியம் 1மணி நிலவரப்படி, மேகாலயாவில் காலை 11 மணி வரை 44,73% வாக்குப்பதிவு; நாகாலாந்தில் 57,06% வாக்குகளும் பதிவாகி உள்ளன.