துருக்கி, சிரியா எல்லைப் பகுதியில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது; இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி, சிரியா பகுதியில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி 6ந்தேதி தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,000-ஐ கடந்தது; அதன் மீட்பு பணிகள் முடிந்த நிலையில், அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலையில், மீண்டும் 6.4 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலநடுக்கமானது, தெற்கு துருக்கி – சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே துருக்கியை புரட்டிப்போட்ட நிலநடுக்கம் காரணமாக, ஏராளமானோர் வீடுகளை இழந்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கி உள்ள நிலையில், மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 3 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட 3 பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.