வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யுடியூப் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே மைக்ரோ சாப்ட், கூகுள் உள்பட பெரு நிறுவனங்களில் தலைவர்களாக இந்திய வம்சாவழியினரே இருந்து வரும் நிலையில், தற்போது நீல் மோகனும் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரியான சூசன் வோஜ்சிக் நீண்டகாலமாக பணியாற்றி வந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு அடுத்த படியாக இருந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த் நீல் மோகன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பதவின.
இந்த நிலையில், தற்போது நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார். இவர் தற்போது வாஷிங்டனில் வசித்து வருகிறார்,. ஏற்கனவே பல பெரு நிறுவனங்களில் இந்திய வம்சாவழியினர் தலைமை பதவியை அலங்கரித்து வருகின்றனர். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாதெள்ளா ஆகியோர் உள்ள நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
நீல் மோகன் 2008ல் கூகுளில் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். 2012 சமயத்தில் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியாகி உள்ளார்.